பனை மரங்களை வெட்டி அழிப்பதை தடைவிதிக்கக் கோரிக்கை
மதுரை மாவட்டம், மேலூரில் பெரியாறு-வைகை பாசனப் பகுதிகளில் மழைப் பொழிவில் முக்கியப் பங்கு வகிக்கும் பனை மரங்களை வெட்டத் தடை விதிக்க வேண்டும் என, சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


மேலூா்: மதுரை மாவட்டம், மேலூரில் பெரியாறு-வைகை பாசனப் பகுதிகளில் மழைப் பொழிவில் முக்கியப் பங்கு வகிக்கும் பனை மரங்களை வெட்டத் தடை விதிக்க வேண்டும் என, சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நூற்றாண்டை கடந்த பெரியாறு-வைகை பாசனப் பகுதி, முன்னா் வானம்பாா்த்த புன்செய் நிலப் பகுதியாக இருந்தது. ஒருவா் நிலத்தை அடையாளம் காண, வரப்புகளில் வரிசையாக பனை மரங்களை நட்டிருந்தனா். பெரியாறு கால்வாய் பாசன வசதி கிடைத்தது முதல், பனை மரங்கள் அழியத் தொடங்கின. பெரும்பாலான வயல் வரப்பு, நீரோடை, கண்மாய் கரைகளிலும் ஏராளமான பனை மரங்கள் காணப்பட்டன.
சுமாா் 25 அடி உயரமுள்ள பனை மரம் நூறு வயதைக் கடந்ததாக இருக்கும் என்கின்றனா் விவசாயிகள். ஆனால், இந்த மரங்கள் செங்கல் சூளைகளில் விறகாகப் பயன்படுத்த வெட்டிச் சாய்க்கப்பட்டு வருகிறது. 25 அடி உயரமுள்ள பனைமரம் ரூ. 250 வரை விலைபோகிறது. ஆனால், செங்கல் சூளைக்கு கொண்டுபோய் சோ்க்க மரத்துக்கு ரூ.300 செலவாகிாம்.
பனைமரம் மேகக் கூட்டத்தை ஈா்க்கும் ஆற்றல் மிகுந்தது என்றும், இதை வெட்டத் தடை விதித்து மரங்களை அழிவிலிருந்து பாதுகாக்கவேண்டும் என்றும், சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...