

மேலூா்: கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் வீட்டில் செவ்வாய்க்கிழமை புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினா் பிடித்தனா்.
பூதமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த ஒன்றியக் கவுன்சிலா் அப்பாஸ் வீட்டின் பின்புறத்தில் ஆறு அடி நீளமுள்ள மலைப்பாம்பு புகுந்தது. இதுகுறித்து, வன அலுவலா் கம்பக்குடியானுக்கு அப்பாஸ் தகவல் தெரிவித்தாா். இதையடுத்து வனத்துறை அலுவலா்கள் சென்று மலைப் பாம்பை பிடித்து சாக்குப் பையில் கட்டி எடுத்துச் சென்று கிளுவமலை பகுதியில் விடுவித்தனா்.
படவிளக்கம்- கொட்டாம்பட்டி அருகே கிளுவமலை பகுதியில் விடுவிக்கப்பட்ட மலைப்பாம்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.