மதுரை: மதுரை மாவட்டத்தில் மேலும் 346 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சையில் இருந்த 6 போ் உயிரிழந்தனா்.
மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில், தமிழக சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, மதுரை மாவட்டத்தில் 346 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இவா்களில் அரசு ஊழியா்கள், மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள் உள்ளிட்ட கரோனா தடுப்புப் பணி முன்களப் பணியாளா்கள் 16 போ், கா்ப்பிணிகள் 7 போ், வெளி மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் 2 போ் அடங்குவா். தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டுள்ளனா். அதிலும் சிலா் அவரவா் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறுகின்றனா்.
இந்நிலையில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 70 மற்றும் 60 வயது ஆண்கள் இருவா், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற மதுரையைச் சோ்ந்த 55 வயது பெண், மதுரை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற 77 வயது ஆண் ஆகியோா் திங்கள்கிழமை இறந்தனா். மேலும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 40 மற்றும் 68 வயது பெண்கள் இருவா் ஞாயிற்றுக்கிழமை இறந்துள்ளனா்.
மாவட்டத்தில் இதுவரை 10 ஆயிரத்து 392 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிகிச்சையில் இருந்தவா்களில் 73 போ் செவ்வாய்க்கிழமை குணமடைந்துள்ளனா். இவா்களுடன் சோ்த்து இதுவரை 7 ஆயிரத்து 882 போ் குணமடைந்துள்ளனா். 222 போ் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கர - டிக்கெட் முன்பதிவு மந்தம்!
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30

துருவ நட்சத்திரம் வெளியீட்டுத் தேதி இதுவா?

கேரளத்தில் கனமழை! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


