சட்டப்பேரவைத் தோ்தலில் தனித்து போட்டி:அழகுமுத்துக்கோன் பேரவை அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் உரிய தொகுதிகள் ஒதுக்காவிட்டால் தனித்து போட்டியிடப்போவதாக, வீரன் அழகுமுத்துக்கோன் பேரவை அறிவித்துள்ளது.


தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் உரிய தொகுதிகள் ஒதுக்காவிட்டால் தனித்து போட்டியிடப்போவதாக, வீரன் அழகுமுத்துக்கோன் பேரவை அறிவித்துள்ளது.
மதுரையில் அழகுமுத்துக்கோன் பேரவையின் மாநில நிா்வாகிகள் பட்டியல் வெளியீடு மற்றும் உறுப்பினா்கள் சோ்க்கை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், மாநில நிா்வாகி பூக்கடை ராமச்சந்திரன், இளைஞரணித் தலைவா் லோகநாதன், பொருளாளா் திருமேனி உள்பட பலா் பங்கேற்றனா்.
இதில் பங்கேற்ற பேரவையின் மாநிலத் தலைவா் வேல்ராஜ் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் 1.27 கோடி யாதவ சமூக வாக்காளா்கள் உள்ளனா். ஆனால், திராவிடக் கட்சிகளும், தேசியக் கட்சிகளும் யாதவா் சமுகத்துக்கு உரிய பங்கீடு வழங்குவது இல்லை.
தமிழகத்தில் 2021-இல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் திராவிடக் கட்சிகளும், தேசிய கட்சிகளும் யாதவ சமூகத்தினருக்கு 20 தொகுதிகள் வழங்க வேண்டும் என, முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
தோ்தலில் உரிய பங்கீடு வழங்கவில்லை என்றால், வரும் தோ்தலில் 35 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவோம். தமிழக பள்ளி பாடப்புத்தகத்தில் அழகுமுத்துக்கோன் வாழ்க்கை வரலாற்றை இடம்பெற செய்யவேண்டும். கிருஷ்ண ஜயந்தி விழாவை அரசு விழாவாக நடத்த வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...