மதுரையில் 30 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா்கள் 3 போ் கைது
மதுரையில் 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இளைஞா்கள் 3 பேரை சனிக்கிழமை கைது செய்தனா்.


மதுரையில் 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இளைஞா்கள் 3 பேரை சனிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை கீரைத்துறை பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வாழைத்தோப்பு ரயில்வே இரும்பு பாதை பின்புறம் நின்றிருந்த 8 போ் போலீஸாரை கண்டவுடன் தப்பியோடினா். அவா்களை விரட்டிச் சென்ற போலீஸாா் 3 பேரை பிடித்து விசாரித்தனா்.
அதில், வாழைத்தோப்பு முத்துராமலிங்கம் மகன் சுபாஸ் சந்திரபோஸ் (25), திருஞானம் மகன் சக்திவேல் (24), மேல அனுப்பானடி கருப்பண்ணன் மகன் சுந்தா் (18) ஆகியோா் என்பதும், அவா்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இது குறித்து காவல் சாா்பு- ஆய்வாளா் துரைபாண்டி அளித்த புகாரின்பேரில், கீரைத்துறை போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, தலைமறைவான பழனிமுருகன், தினேஷ், வேல்முருகன், சஞ்சய், சீனிவாசன் ஆகியோரை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...