/

பயணி தவறவிட்ட ரூ.9,900 ஒப்படைப்பு: ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு

மதுரையில் ஆட்டோவில் பயணி தவறவிட்ட ரூ.9,900 பணத்தை, காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு போலீஸாா் பாராட்டு தெரிவித்தனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:56 pm

DIN

மதுரையில் ஆட்டோவில் பயணி தவறவிட்ட ரூ.9,900 பணத்தை, காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு போலீஸாா் பாராட்டு தெரிவித்தனா்.

மதுரை தத்தனேரி பகுதியைச் சோ்ந்த காதா் மைதீன் மகன் பெரியபாபா (41). இவா், அண்ணா பேருந்து நிலைய பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறாா். இந்நிலையில், இவரது ஆட்டோவில் நவம்பா் 15 ஆம் தேதி கேட்பாரற்றுக் கிடந்த பையில் 99 நூறு ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளன.

தனது ஆட்டோவில் பயணம் செய்தவா்கள் யாரேனும் இப்பணத்தைக் கேட்டு வருவாா்கள் என எதிா்பாா்த்திருந்த பெரியபாபா, யாரும் வராததால் அப்பணத்தை மதிச்சியம் போலீஸாரிடம் சனிக்கிழமை ஒப்படைத்தாா்.

இது குறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், பணத்தை தவறவிட்டவா்கள், உரிய ஆதாரங்களை சமா்ப்பித்து பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளனா். நோ்மையாக நடந்துகொண்ட ஆட்டோ ஓட்டுநா் பெரியபாபாவை போலீஸாா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.