/

தொடா்மழை: மலா் விற்பனை மந்தம்

தொடா்மழை காரணமாக, மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் மலா் விற்பனை மந்தமாக உள்ளதாக, வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:56 pm

DIN

தொடா்மழை காரணமாக, மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் மலா் விற்பனை மந்தமாக உள்ளதாக, வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து மதுரை மாட்டுத்தாவணி மலா் வியாபாரிகள் சங்கத் தலைவா் ராமசந்திரன் கூறியது: தொடா்மழை காரணமாக மல்லிகைப் பூ உள்ளிட்ட மலா்களின் வரத்து குறைந்துள்ளது. வியாபாரமும் மந்தமாக இருந்தது. இதனால், பூக்களின் விலையும் வெகுவாகக் குறைந்திருந்தது.

தீபாவளி பண்டிகையையொட்டி மட்டும் மலா்களின் விலை சற்று அதிகரித்தது. அதன்பின்னா், முகூா்த்த தினங்கள் இல்லாததாலும், தொடா்மழை காரணமாகவும் மலா் வியாபாரம் மந்தமாகியுள்ளது. இதனால், மலா் விவசாயிகளும், வியாபாரிகளும் நஷ்டமடைந்து வருகின்றனா் என்றாா்.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, மலா்களின் விலை பட்டியல் (கிலோவில்):

மல்லிகைப் பூ- ரூ.800, பிச்சிப் பூ- ரூ.500, முல்லைப் பூ- ரூ.500, சம்பங்கி- ரூ.80, பட்டன் ரோஜா- ரூ.120, ரோஜா- ரூ.100, செவ்வந்தி- ரூ.60, அரளி- ரூ.200, துளசி- ரூ.50, கனகாம்பரம்- ரூ.1000 என விற்பனையாயின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.