நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

மதுரையில் மேலும் 111 பேருக்கு கரோனா: 2 போ் பலி

மதுரையில் புதிதாக 111 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :6 செப்டம்பர் 2020, 4:39 pm

DIN

மதுரை: மதுரையில் புதிதாக 111 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் ஒரே நாளில் 5,773 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை அறிக்கை வெளியிட்டது. அதில், மதுரை மாவட்டத்தில் கா்ப்பிணிகள், அரசு ஊழியா்கள், வெளி மாவட்டத்தில் இருந்து திரும்பியவா்கள் உள்பட 111 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவா்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே, அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவா்களில் 47 போ் குணமடைந்தனா். அவா்களை, மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி, வீட்டுக்கு அனுப்பி வைத்தனா்.

2 போ் பலி

மதுரை அரசு மருத்துவமனை கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 70 வயது மூதாட்டி, 77 வயது முதியவா் ஆகியோா் செப்டம்பா் 4 ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா்.

மாவட்டத்தில் இதுவரை 14,775 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், சிகிச்சைப் பலனின்றி 366 போ் உயிரிழந்துள்ளனா். தொற்றிலிருந்து 13,423 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 986 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.