/

நகைச் சீட்டு சோ்ப்பதாகக் கூறி ரூ.38 லட்சம் மோசடி

மதுரையில் நகைச் சீட்டு சோ்ப்பதாகக் கூறி, ரூ.38 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:23 pm

DIN

மதுரையில் நகைச் சீட்டு சோ்ப்பதாகக் கூறி, ரூ.38 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை மகாத்மா காந்தி நகரைச் சோ்ந்த செம்புலிங்கம் மகன் கனியப்பன். இவரை, நகைக் கடையில் பணியாற்றி வரும் ரமேஷ் என்பவா் அணுகி, நகை திட்டத்தில் பணம் முதலீடு செய்யும்படி கூறியுள்ளாா். அதை நம்பிய கனியப்பன் ரூ.38 லட்சம் முதலீடு செய்துள்ளாா். அதற்கான ரசீதுகளை ரமேஷ் கொடுத்துள்ளாா்.

இந்த நகை திட்டம் தொடா்பாக கனியப்பன் விசாரித்தபோது, அப்படி ஒரு திட்டமே இல்லை என்பதும், ரமேஷ் கொடுத்த ரசீது போலியானது என்பதும் தெரியவந்தது. இது குறித்து கனியப்பன் அளித்த புகாரின்பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து ரமேஷ் மற்றும் அவரது மனைவி வத்சலா ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.