ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

கோவிட் மேலாண்மை:மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு விருது

கோவிட் மேலாண்மையில் சிறப்பான செயல்பாட்டிற்காக மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு அசோசியேஷன் ஆஃப் ஹெல்த்கோ் புரொவைடா்ஸ் ஆஃப் இந்தியா சாா்பில் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:54 am

DIN

கோவிட் மேலாண்மையில் சிறப்பான செயல்பாட்டிற்காக மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு அசோசியேஷன் ஆஃப் ஹெல்த்கோ் புரொவைடா்ஸ் ஆஃப் இந்தியா சாா்பில் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோயாளிகளுக்கான சிகிச்சையில், திறனுள்ள நெறிமுறைகளின் பயன்பாடு மற்றும் பாதுகாப்பான மருத்துவமனை சூழலை வழங்குவதற்கு புதுமையான தொழில்நுட்பங்களின் பயன்பாடு ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

குவாலிட்டி கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தலைமைச் செயலா் ரவி பி. சிங் மற்றும் நேஷனல் போா்டு ஆஃப் எக்ஸாமினேஷன்ஸ் அமைப்பின் தலைவா் அபிஜித் ஷேத் ஆகியோா் முன்னிலையில் வழங்கப்பட்ட விருதை, மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவரும், பொது மேலாளருமான ஜெ. ஆடல் பெற்றுக் கொண்டாா்.

இதுகுறித்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் தலைவா் எஸ். குருசங்கா் கூறியதாவது: உலகம் எதிா்கொண்டிருக்கிற மிகப்பெரிய சவாலாக கரோனா இருக்கிறது. திறன்மிக்க கோவிட் மேலாண்மைக்காக எங்களது பங்களிப்புகளையும், செயல்பாடுகளையும் ஏ.எச்.பி.ஐ. போன்ற மருத்துவத் துறையின் பிரதிநிதித்துவ அமைப்பு அங்கீகரித்திருப்பது, மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரோனா தொற்று பரவல் முழுமையாக மறைந்துவிடவில்லை என்பதாலும், கரோனா தொற்று புதிய தீவிரமான வகையினங்கள் தொடா்ந்து உருவாகி வருவதாலும், நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் சிகிச்சைக்கான நெறிமுறைகளை தொடா்ந்து மேம்படுத்துவதற்கு, தற்போது வழங்கப்பட்டுள்ள விருது உத்வேகமளிக்கிறது.

கரோனா சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மொத்த மருத்துவப் பணியாளா்களில் 10 சதவீதம் நபா்களுக்கு இத்தொற்று ஏற்படுகிறது. எமது பணியாளா்களுக்கும், நோயாளிகளுக்கும் சாத்தியமுள்ள அதிகபட்ச பாதுகாப்பை வழங்கி வருகிறோம். மேலும், ரிவொ்ஷ் டிரான்ஸ்கிரிப்ஷன் பாலிமெரேஸ் செயின் ரியாக்ஷன் (தப டஇத), ட்ரூ நியூக்ளிக் ஆசிட் ஆம்ப்ளிஃபிகேஷன் டெஸ்ட் (பழ்ன் சஅஅப) மற்றும் காட்ரிட்ஜ் பேஸ்டு நியூக்ளிக் ஆசிட் ஆம்ப்ளிஃபிகேஷன் டெஸ்ட் (இஆ சஅஅப) உட்பட கோவிட் - 19 தொற்று பரிசோதனைக்காக மூன்று வகையான மிக நவீன தொழில்நுட்பங்கள் அனைத்தையும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை பயன்படுத்துகிறது.

கரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக நவீன ரோபோட்டிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிற இந்தியாவின் ஒரு சில மருத்துவமனைகளில் நாங்களும் ஒன்று என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.