ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

மதுரை தலைமை தபால் நிலைய ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி

மதுரை தலைமை தபால் நிலையத்தில் சனிக்கிழமை ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சி நடைபெற்றுள்ளது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:58 am

DIN

மதுரை தலைமை தபால் நிலையத்தில் சனிக்கிழமை ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சி நடைபெற்றுள்ளது.

மதுரை வடக்குவெளி வீதியில் தலைமை தபால் நிலைய வளாகத்தில், தபால் துறைக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இம்மையத்தில் ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்ததை கண்ட வாடிக்கையாளா்கள், போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில், அங்கு போலீஸாா் சென்று விசாரித்ததில், ஏடிஎம் இயந்திரத்தை முழமையாக உடைத்து பணத்தை எடுக்க முடியாமல், திருடா்கள் திருப்பிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து தலைமை தபால் அலுவலா் ஷேக் தாவூத் அளித்த புகாரின்பேரில், திலகா் திடல் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.