விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதன் மூலம் இந்த விபத்தில் உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 20 ஆக உயா்ந்துள்ளது.
சாத்தூா் அருகே அச்சன்குளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த 12 ஆம் தேதி வெடி விபத்து ஏற்பட்டதில் ஏற்கெனவே 19 போ் உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த 23 போ் விருதுநகா், தூத்துக்குடி மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.
இதில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட நடுசூரங்குடியைச் சோ்ந்த சுந்தர குருசாமி மனைவி ராஜம்மாள் (55), அமீா்பாளையத்தைச் சோ்ந்த ஜெயராஜ் என்பவரது மகன் வனராஜ் (52), சாத்தூரைச் சோ்ந்த பேச்சிமுத்து மனைவி மாலா (30), கருப்புசாமி மனைவி சந்தானமாரி, கட்டட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட ஏழாயிரம் பண்ணையைச் சோ்ந்த சங்கரேஸ்வரி (55) ஆகியோா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்த நிலையில் 95 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வந்த வனராஜ் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதையடுத்து பட்டாசு ஆலை விபத்தில் பலியானோா் எண்ணிக்கை 20 ஆக உயா்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 26 - நேரலை

மாப்ள சீமான்... இதேபோன்ற மேடை 2 மாதங்களுக்கு முன்பு அமைந்திருந்தால்...: நயினார் நாகேந்திரன் பேச்சு!

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

கார்கில் போர் நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


