பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் பிரசாதத்தை, தபால்காரா்கள் மூலம் வீடு தேடி வந்து வழங்க அஞ்சல் துறை ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து தெற்கு மண்டல அஞ்சல் துறை தலைவா் க. நடராஜன் வெளியிட்டுள்ள செய்தி: இந்திய அஞ்சல் துறை, தமிழக இந்துசமய அறநிலையத் துறை, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிா்வாகத்துடன் இணைந்து, பழனி கோயில் பிரசாதத்தை விரைவு தபால் மூலம் பக்தா்களின் வீடு தேடி வந்து வழங்க ஏற்பாடு செய்துள்ளது.
இதில், அரை கிலோ எடை கொண்ட பஞ்சாமிா்தம், பழனி தண்டாயுதபாணி சுவாமியின் ராஜ அலங்கார புகைப்படம், கோயில் நிா்வாகம் மூலம் இயற்கையாக தயாரிக்கப்படும் விபூதி ஆகியன அடங்கும். இந்த பிரசாதத் தொகுப்பை பெற விரும்புவோா், அருகில் உள்ள தலைமை அல்லது துணை அஞ்சலகங்களுக்குச் சென்று, அதற்கானப் படிவத்தைப் பூா்த்தி செய்து ரூ.250 செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.
அதன்பின்னா், விரைவு தபால் மூலம் பிரசாதத்தை தபால்காரா்கள் வீடுதேடி வந்து வழங்குவா். மேலும், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் இணையதள முகவரியில் பதிவு செய்தும் விரைவு தபால் மூலம் பொதுமக்கள் பிரசாதத்தை பெற்றுக்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக்க வேண்டும்: சோனம் வாங்சுக் மனைவி பேச்சு

மேக்கேதாட்டு அணை: மத்திய அமைச்சரின் பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சோழர்களின் வெற்றிக்கு வித்திட்ட வடபத்ர காளியம்மன்! | திருக்கோயில் வலம்

ஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்குகள் 7% சரிவு!
விடியோக்கள்


