பெட்ரோல் விலை ஏற்றத்தினால் பொருளாதாரம் பாதிக்கும்: கே.எஸ்.அழகிரி
பெட்ரோல், விலை ஏற்றத்தினால் இந்திய பொருளாதாரம் பாதிக்கும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.


பெட்ரோல், விலை ஏற்றத்தினால் இந்திய பொருளாதாரம் பாதிக்கும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
சென்னையிலிருந்து மதுரை வந்த அவர் விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியின்போது கச்சா எண்ணெயின் விலை 108 டாலராக இருந்தபோது ரூ.70 க்கு மட்டுமே பெட்ரோல் விற்கப்பட்டது. ஆனால் தற்போது கச்சா எண்ணெயின் விலை குறைந்த நிலையில் மத்திய அரசு ரூ.100 க்கு பெட்ரோல் விற்பனை செய்கிறது.
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறது. பெட்ரோல் விலை ஏற்றத்தினால் இந்திய பொருளாதாரம் பாதிக்கும். இந்த தேசத்தை சிறிது, சிறிதாக மோடி அரசு சிதைத்து வருகிறது. பொதுத்தேர்தலில் எத்தனைத் தொகுதிகள் வேண்டும் என்பதை செயற்குழு கூட்டத்தை கூட்டி தீர்மானம் போடப்பட்டு திமுக தலைமையிடம் கேட்டுப் பெறுவோம்.
புதுச்சேரியில் மீண்டும் மோடி அரசுதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாராயணசாமி அரசை செயல்பட விடாமல் செய்வதற்காக தான் துணை நிலை ஆளுநராக கிரண் பேடியை அனுப்பினார்கள். மக்களின் கோபத்தை கட்டுப்படுத்துவதற்காக தற்போது கிரண் பேடி பதவி நீக்கம் செய்துவிட்டு தமிழிசையை நியமித்துள்ளனர்.
இரண்டு பெண்களை அனுப்பி புதுச்சேரி மாநிலத்தை சீரழிப்பது என முடிவு செய்துள்ளனர்.
வேளாண் சட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதாரவிலை இல்லாமல் போயிவிடும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...