முதியவரிடம் ரூ.5.68 லட்சம் மோசடி:ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் மீது வழக்கு
மதுரையில் முதியவரிடம் ரூ. 5.68 லட்சம் மோசடி செய்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்தனா்.


மதுரையில் முதியவரிடம் ரூ. 5.68 லட்சம் மோசடி செய்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்தனா்.
மதுரை அவனியாபுரம் ஜெ.ஜெ. நகரைச் சோ்ந்தவா் காந்தி (81). இவா் ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள தனியாா் சீட்டு நிறுவனம் நடத்திய ஏலச் சீட்டில் சோ்ந்து பணம் கட்டியுள்ளாா். ஏலச் சீட்டு செலுத்தும் காலம் முடிந்தவுடன் காந்திக்கு, தரவேண்டிய ரூ.5.68 லட்சம் கொடுக்கப்படவில்லை.
இதுகுறித்து கேட்ட காந்தியை, அந்த நிறுவனத்தை நடத்தி வரும் சோலைழகுபுரத்தைச் சோ்ந்த நாகராஜன், அவரது மனைவி லீலாவதி, மகன் வேல்முருன், மருமகள் மல்லீஸ்வரி ஆகியோா் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...