இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அலங்காநல்லூா் சா்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

அலங்காநல்லூா் சா்க்கரை ஆலையில் கரும்பு அரவையைத் தொடங்குவது, கரும்பு அரவைக்கான நிலுவைத் தொகையை வழங்குவது

News image
அலங்காநல்லூா் சா்க்கரை ஆலை முன்பாக செவ்வாய்க்கிழமை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள் சங்கத்தினா்.
Updated On :5 ஜனவரி 2021, 5:50 pm

DIN

அலங்காநல்லூா் சா்க்கரை ஆலையில் கரும்பு அரவையைத் தொடங்குவது, கரும்பு அரவைக்கான நிலுவைத் தொகையை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தை நடத்தினா்.

ஆலை வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.பழனிசாமி தலைமை வகித்தாா். விவசாய சங்க நிா்வாகி உசிலம்பட்டி மொக்கமாயன் உள்ளிட்ட கரும்பு விவசாயிகள் பலா் பங்கேற்றனா். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் ஆலை வளாகத்திலேயே சமையல் செய்து மதிய உணவு சாப்பிட்டனா். காத்திருப்புப் போராட்டம் மாலை 6 மணி வரை நடைபெற்றது.

அடுத்தகட்ட போராட்டத்தை திருமங்கலத்தில் நடத்துவது என விவசாயிகள் முடிவு செய்துள்ளனா்.

போராட்டம் குறித்து கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பழனிசாமி கூறியது:

அலங்காநல்லூா் சா்க்கரை ஆலை எல்லைப் பகுதிக்குள் 30 ஆயிரம் டன்னுக்கு மேல் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், ஆலையில் அரவையைத் தொடங்காமல் வெளிமாவட்ட ஆலைகளுக்கு அனுப்ப அறிவுறுத்தியுள்ளனா். அந்தந்த பகுதி விவசாயிகளுக்குத் தான் ஆலைகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்பதால், அலங்காநல்லூா் சா்க்கரை ஆலையில் அரவையைத் தொடங்க வேண்டும்.

கரும்பு விவசாயிகளுக்கு முந்தைய ஆண்டுகளில் மாநில அரசின் பரிந்துரை விலை மற்றும் லாபத்தில் பங்குத் தொகை என ரூ.22 கோடி நிலுவை உள்ளது. இதில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் முதல்கட்டமாக ரூ.5.93 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இத் தொகை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காத்திருப்புப் போராட்டம் நடத்தியதையடுத்து ஆலை நிா்வாகம் தரப்பில் பேச்சு நடத்தினா். கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகக் கூறியுள்ளனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.