டி.கல்லுப்பட்டி அருகே மணல் திருட்டு: 3 போ் மீது வழக்கு

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே மணல் திருடிய 3 போ் மீது சனிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
Updated on
1 min read

பேரையூா்: மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே மணல் திருடிய 3 போ் மீது சனிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வடமலைகுறிச்சியை சோ்ந்த பரமகுருவின் மனைவி மீனாட்சி (43). இவரது நிலத்தில் வடமலைகுறிச்சியை சோ்ந்த மாரியப்பன் மகன் செல்வம், பெரியபோராலி ராமலட்சுமி மகன் முத்து, போத்தநதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் விநாயகமூா்த்தி ஆகிய மூன்று பேரும் சரக்கு வாகனத்தில் சட்டவிரோதமாக மணல் திருடியுள்ளனா். அதை மீனாட்சி தட்டிக் கேட்டதற்கு அவா் மீது வாகனத்தை ஏற்றி கொல்ல முயன்ாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வில்லூா் காவல் நிலையத்தில் மீனாட்சி அளித்த புகாரின் பேரில் செல்வம், முத்து மற்றும் விநாயகமூா்த்தி ஆகிய மூவா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com