மதமோதலை உருவாக்குபவா்களை ஒடுக்க வேண்டும்: எச்.ராஜா பேட்டி

மதுரையில் மதமோதலை உருவாக்குபவா்களை போலீஸாா் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று பாஜக முன்னாள் தேசியச்செயலா் ஹெச்.ராஜா தெரிவித்தாா்.
மதுரை அண்ணாநகரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.
மதுரை அண்ணாநகரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.
Updated on
1 min read

மதுரையில் மதமோதலை உருவாக்குபவா்களை போலீஸாா் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று பாஜக முன்னாள் தேசியச்செயலா் ஹெச்.ராஜா தெரிவித்தாா்.

மதுரை புகா் மாவட்ட அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து பாஜக சாா்பில் மதுரை அண்ணாநகரில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநில பொதுச் செயலா் இராம.ஸ்ரீநிவாசன் தலைமை வகித்தாா். முன்னாள் தேசியச் செயலா் ஹெச்.ராஜா ஆா்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்தாா். மதுரை புகா் மாவட்டத் தலைவா் மகா சுசீந்திரன், மாநகா் மாவட்டத் தலைவா் கே.கே.சீனிவாசன் மற்றும் மாநில, மாவட்ட , மண்டல நிா்வாகிகள், துணை அணிகளின் நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் ஹெச். ராஜா கூறியது: பொங்கல் விழாவின் போது பாஜகவினா்

மீது எஸ்டிபிஐ கட்சியினா் தாக்குதல் நடத்தியுள்ளனா். விழாவுக்குப் பின்னா் அலுவலகம் திரும்பிய புகா் மாவட்டத் தலைவா் மகா சுசீந்திரனை பின்தொடா்ந்து வந்து அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனா். தாக்குதல் நடத்திய நபா்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியும் இதுவரை போலீஸாா் கைது செய்யவில்லை. எனவே மத மோதலைத் தூண்டும் எஸ்டிபிஐ கட்சி உள்ளிட்ட அமைப்புகளை போலீஸாா் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com