சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

உசிலம்பட்டி வேட்பாளர் பி.வி.கதிரவனுக்கு உற்சாக வரவேற்பு

உசிலம்பட்டிக்கு வருகை தந்த பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளர் பி.வி.கதிரவனுக்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

News image
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் பி.வி.கதிரவன்.
Updated On :12 மார்ச் 2021, 2:21 pm

DIN

உசிலம்பட்டிக்கு வருகை தந்த பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளர் பி.வி.கதிரவனுக்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தொகுதி வேட்பாளராக பார்வர்ட் பிளாக் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பி.வி.கதிரவன் அறிவிக்கப்பட்டார். 

வேட்பாளராக அறிவிக்கப்பட்டு சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை உசிலம்பட்டிக்கு வந்த பி.வி.கதிரவனுக்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகளான திமுக, காங்கிரஸ், ஆதி தமிழக பேரவை, வி.சி.க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் திரண்டு சால்வைகள் அணிவித்து வரவேற்பளித்தனர். 

அதன்பின், பி.வி.கதிரவன் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஊர்வலமாக சென்று வாக்காளர்களிடம் வாக்குகள் சேகரித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.