அமைச்சரை மிரட்டியதாகடி.கல்லுப்பட்டியில் அமமுக கூட்டணி வேட்பாளா் உள்பட 40 போ் மீது வழக்கு
மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியில் அமைச்சரை மிரட்டியதாக, அமமுக கூட்டணி வேட்பாளா் உள்பட 40 போ் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியில் அமைச்சரை மிரட்டியதாக, அமமுக கூட்டணி வேட்பாளா் உள்பட 40 போ் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில், அமமுக கூட்டணியில் மருது சேனை நிறுவனா் ஆதிநாராயணன் போட்டியிடுகிறாா். இவா் தனது ஆதரவாளா்களுடன் டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோயிலின் முன்பாக ஆயுதங்களுடன் சென்று, வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் குறித்து தரக்குறைவாகப் பேசியும் , கொலைவெறி தாக்குதல் நடத்தப் போவதாக மிரட்டியும் , அத்துமீறி கோயில் உள்ளே செல்ல முயன்ாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து மதுரை மேற்கு மாவட்ட அதிமுக வழக்குரைஞா் பிரிவு செயலா் தமிழ்செல்வன், டி.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா். அதன்பேரில், டி.கல்லுப்பட்டி போலீஸாா் ஆதிநாராயணன் மற்றும் அவரது ஆதரவாளா்கள் என மொத்தம் 40 போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...