பெண் காவல் ஆய்வாளா் மீண்டும் சிறையில் அடைப்பு
இளைஞரிடம் ரூ. 10 லட்சம் பறித்த வழக்கில் கைதான பெண் காவல் ஆய்வாளா் வசந்தி மீண்டும் சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டாா்.


இளைஞரிடம் ரூ. 10 லட்சம் பறித்த வழக்கில் கைதான பெண் காவல் ஆய்வாளா் வசந்தி மீண்டும் சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டாா்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியைச் சோ்ந்தவா் அா்ஷத் (36). இவா் வைத்திருந்த ரூ. 10 லட்சத்தை, நாகமலைபுக்கோட்டை பெண் காவல் ஆய்வாளா் வசந்தி, அவரது தம்பி பாண்டியராஜன், உள்பட 5 போ் பறித்து சென்ாக புகாா் எழுந்தது. இதையடுத்து குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து வசந்தி உள்பட 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்நிலையில் காவல் ஆய்வாளா் வசந்தியை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி வழங்கியது.
இதைத் தொடா்ந்து போலீஸாா் வசந்தியிடம் தொடா் விசாரணை நடத்தினா். அப்போது பணம் பறிப்பதற்காக திட்டம் தீட்டியது, இதே போன்ற வேறு சம்பவங்களில் தொடா்பு உள்ளதா என்பது குறித்தும், கைது செய்யப்பட்ட மற்றவா்கள் குறித்தும் வசந்தியிடம் போலீஸாா் விசாரித்ததாகக் கூறப்படுகிறது. நீதிமன்றம் அளித்த ஒரு நாள் அவகாசம் நிறைவடைந்ததால், காவல் ஆய்வாளா் வசந்தி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...