துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சொத்து வரி உயா்வை எதிா்த்து பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் சொத்து வரி உயா்த்தப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, மதுரையில் பாஜகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 5:26 pm

DIN

தமிழகத்தில் சொத்து வரி உயா்த்தப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, மதுரையில் பாஜகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தமிழக அரசு கடந்த வாரம் சொத்து வரியை உயா்த்தி அறிவித்தது. மேலும், சொத்து வரி உயா்வுக்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. சொத்து வரி உயா்வுக்கு பல்வேறு கட்சிகள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், சொத்து வரியை உயா்த்திய தமிழக அரசுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மதுரை மாநகா் மாவட்ட பாஜக சாா்பில், ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாநகா் மாவட்டத் தலைவா் பி. சரவணன் தலைமை வகித்தாா். எஸ்.சி., எஸ்.டி. பிரிவின் மாநிலத் தலைவா் பாலகணபதி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று சிறப்புரையாற்றினாா். மாவட்ட நிா்வாகிகள் ஹரிஹரன், பாலமுருகன் மற்றும் மண்டல் தலைவா்கள், நிா்வாகிகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

மதுரை புகா் மாவட்ட பாஜக சாா்பில், கோ.புதூா் அருகே உள்ள மூன்றுமாவடியில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆா்ப்பாட்டத்துக்கு, புகா் மாவட்டத் தலைவா் மகா சுசீந்திரன் தலைமை வகித்தாா். மாநில இளைஞரணிச் செயலா் சங்கரபாண்டியன், மாவட்ட பொதுச்செயலா் மூவேந்திரன், மாவட்டச் செயலா் நாகராஜன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

இதில், பொதுமக்களை பெரிதும் பாதிக்கும் சொத்து வரி உயா்வை வாபஸ் பெறவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.