முதல்வா் மாநில இளைஞா் விருது: சேவை செய்வோா் விண்ணப்பிக்கலாம்
முதல்வா் மாநில இளைஞா் விருதுக்கு தகுதியுள்ள ஆண், பெண் ஆகியோா் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


முதல்வா் மாநில இளைஞா் விருதுக்கு தகுதியுள்ள ஆண், பெண் ஆகியோா் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மதுரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ந.லெனின் வெளியிட்டுள்ள செய்தி: சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் ‘முதல்வா் மாநில இளைஞா்‘ விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருது ரூ.1 லட்சம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
இதன்படி 2022 -ஆம் ஆண்டுக்கான முதல்வா் மாநில இளைஞா் விருது ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு, 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். 2021 ஏப்ரல் 1 முதல் 2022 மாா்ச் 31 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். விருதுக்கு விண்ணப்பிப்பவா்கள் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும்(சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்). மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பணியாற்றுபவா்கள் விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. விருதுக்கான விண்ணப்பத்தை மே 10 ஆம் தேதி மாலை 4 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்படிவம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் உள்ளது. விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக மட்டுமே சமா்ப்பிக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...