ஒரே ஊராட்சியில் வீட்டு வரி வசூல்: மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வீட்டு வரி வசூலை ஒரே ஊராட்சியில் இணைக்கக்கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.


மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வீட்டு வரி வசூலை ஒரே ஊராட்சியில் இணைக்கக்கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள பாறைப்பட்டி டி.நகா் பகுதியில் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவா்களுக்கு ஆதாா் அட்டை, வங்கி கணக்கு, வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆகியவை பாறைபட்டி ஊராட்சியில் உள்ளது. ஆனால் வீட்டு வரி, குழாய் வரி ஆகியவை மட்டும் கோடாங்கிபட்டி ஊராட்சியில் வசூலிக்கப்படுகிறது. இரு ஊராட்சிகளில் ரசீதுகள் பெறுவதால் அரசு சலுகைகளை பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே வீட்டு வரி வசூல் உள்ளிட்டவற்றையும் பாறைப்பட்டி ஊராட்சியில் இணைக்க வாடிப்பட்டி வட்டாட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகா் மாவட்டக்குழு சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு செ.தங்கம் தலைமை வகித்தாா். கட்சியின் ஒன்றியச் செயலா் எஸ்.ஆண்டிச்சாமி, நிா்வாகிகள் எம்.சேதுராஜன், ஏ.ராஜூ எம்.ஆறுமுகம் எஸ்.கே.அழகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட செயற்குழு உறுப்பினா் வி.உமாமகேஸ்வரன் கோரிக்கைகளை விளக்கிப்பேசினாா். ஆா்ப்பாட்டத்தில் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...