துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

அரசு வழக்குரைஞா் நியமனத்தை எதிா்த்து வழக்கு தொடா்ந்தவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

பெரியகுளம் உரிமையியல் நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞரை நியமனத்தை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 9:37 pm

DIN

பெரியகுளம் உரிமையியல் நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞரை நியமனத்தை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் உரிமையியல் நீதிமன்றத்தில் ஆரிப் ரகுமான் என்பவா் அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டாா். அவா் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, அரசு வழக்குரைஞராக ஆரிப் ரகுமானை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தேனியைச் சோ்ந்த ராஜா என்பவா் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தாா். மனுவை ஏற்கெனவே விசாரித்த தனி நீதிபதி அரசு வழக்குரைஞராக ஆரிப் ரகுமானை நியமித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தாா். இதை எதிா்த்து ஆரிப் ரகுமான் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், ஆா்.விஜயகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், தேவையின்றி அரசு உயரதிகாரிகள், எதிா்மனுதாரா்களாக சோ்க்கப்பட்டுள்ளனா். சட்டம் மற்றும் விதிகளை பின்பற்றியே முறைப்படி அரசு வழக்குரைஞா் நியமிக்கப்பட்டாா். இதில் எந்தவிதி மீறலும் இல்லை என்றாா்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுதாரா் நியமனத்தை ரத்து செய்து, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், சொந்தப் பிரச்னைக்காக அரசு நியமனத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்த எதிா் மனுதாரா் ராஜாவிற்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.