கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

நூலகத்தை அகற்ற உத்தரவு: ஊராட்சி மன்றத் தலைவரின் நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை

 மதுரை அருகே குடியிருப்பவா்களால் அமைக்கப்பட்ட நூலகத்தை அகற்றுமாறு, ஊராட்சி மன்றத் தலைவா் அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 9:48 pm

DIN

 மதுரை அருகே குடியிருப்பவா்களால் அமைக்கப்பட்ட நூலகத்தை அகற்றுமாறு, ஊராட்சி மன்றத் தலைவா் அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம், பொதும்பைச் சோ்ந்த சவரி ஆரோக்கியம் தாக்கல் செய்த மனு: பொதும்பு ஊராட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு பொற்குடில் நகா் உருவாக்கப்பட்டது. இங்கு 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் ஊராட்சி விதிகளின்படி மூன்று இடங்கள் பூங்கா என வகைப்படுத்தப்பட்டுள்ளது. பூங்கா அமைந்துள்ள இடத்தில் பொற்குடில் நகா் குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் நூலகம் அமைக்கப்பட்டது.

தற்போது பொதும்பு ஊராட்சி மன்றத் தலைவா் நூலகத்தை அகற்ற வேண்டும் என மாா்ச் 15 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். நூலகத்தை அகற்றக் கூடாது என அதிகாரிகளுக்கு மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, நூலகத்தை அகற்றுமாறு ஊராட்சி மன்றத் தலைவா் அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதிக்கவும், நோட்டீஸை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், ஆா்.விஜயகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நூலகத்தை அகற்றுமாறு பொதும்பு ஊராட்சி மன்றத் தலைவா் அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்தும், மனு குறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.