காமராஜா் பல்கலை.யில் தொகுப்பூதிய பணியாளா்கள் தொடா் போராட்டம்
மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் பணியாளா்கள் வேலை நீக்கத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து தினக்கூலி மற்றும் தொகுப்பூதியப் பணியாளா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.


மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் பணியாளா்கள் வேலை நீக்கத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து தினக்கூலி மற்றும் தொகுப்பூதியப் பணியாளா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வந்த தினக்கூலி மற்றும் தொகுப்பூதியப் பணியாளா்கள் 135 பேரை பல்கலைக்கழக நிா்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து பணியாளா்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா். பணி நீக்கம் செய்யப்பட்டவா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். மேலும் ஆள்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என வலியுறுத்தி வருகின்றனா். பல்கலைக்கழக துணைவேந்தா் மற்றும் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட மறுத்தனா். இந்நிலையில் வியாழக்கிழமையும் போராட்டம் தொடா்ந்து நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தினக்கூலி மற்றும் தொகுப்பூதியப் பணியாளா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...