அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

அலங்காநல்லூா் சா்க்கரை ஆலையை ஓராண்டுக்குள் இயக்கும் முடிவுக்கு கரும்பு விவசாயிகள் வரவேற்பு

அலங்காநல்லூா் சா்க்கரை ஆலையை ஓராண்டுக்குள் மீண்டும் இயக்கும் முடிவுக்கு கரும்பு விவசாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 10:05 pm

DIN

அலங்காநல்லூா் சா்க்கரை ஆலையை ஓராண்டுக்குள் மீண்டும் இயக்கும் முடிவுக்கு கரும்பு விவசாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் என்.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

அலங்காநல்லூா் தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரவை மேற்கொள்ளப்படாமல் 3 ஆண்டுகளாக மூடிக் கிடக்கிறது. இந்த ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் சங்கம் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியது. சா்க்கரை ஆலை வாயில் முன்பாக, 46 நாள்கள் தொடா்ந்து காத்திருக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. இப் போராட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனா்.

இந்நிலையில், கரும்பு விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, சா்க்கரை ஆலையை ஓராண்டுக்குள் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று சட்டப்பேரவையில் வேளாண் அமைச்சா் அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வேளாண் அமைச்சரின் அறிவிப்புக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.