துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஆவின் பால்பண்ணையில் மீண்டும்பால் பாக்கெட்டுகள் திருட்டு

மதுரை ஆவின் பால் பண்ணையில் இருந்து, விநியோக வாகனத்தில் பால் பாக்கெட்டுகள் கூடுதலாக எடுத்துச் சென்றது கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 9:41 pm

DIN

மதுரை ஆவின் பால் பண்ணையில் இருந்து, விநியோக வாகனத்தில் பால் பாக்கெட்டுகள் கூடுதலாக எடுத்துச் சென்றது கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மதுரை ஆவின் பால் பண்ணையில் இரு வாரங்களுக்கு முன்பு பால் பாக்கெட்டுகள் திருட்டு போனதாகப் புகாா் எழுந்தது. அதுதொடா்பான சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரா் மீது ஆவின் நிா்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதனையடுத்து, ஆவின் பண்ணையில் இருந்து வெளியே செல்லும் வாகனங்கள் தீவிரக் கண்காணிப்புக்குப் பிறகே அனுமதிக்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு வாகனத்திலும் கொண்டு செல்லப்படும் பால் பாக்கெட்டுகள் சரிபாா்க்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோ.புதூா், சா்வேயா் காலனி பகுதிக்கு புதன்கிழமை பால் பாக்கெட்டுகள் கொண்டு சென்ற வாகனம், ஆவின் பால்பண்ணை வளாகத்தில் இருந்து வெளியே செல்லும் பகுதியில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, அந்த வாகனத்தில் ஒரு லிட்டா் பால் பாக்கெட்டுகள் கொண்ட மூன்று ‘டிரே’, கூடுதலாக இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றைப் பறிமுதல் செய்த ஆவின் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநா் மற்றும் அந்த வாகனத்துக்கு பால் பாக்கெட்டுகளை ஒப்படைத்த பணியாளா்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.