சரக்கு வாகனம் மோதி காயமடைந்த இருவா் சிகிச்சை பலனின்றி பலி
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் சாலையில் நடந்து சென்றவா்கள் மீது சரக்கு வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த இருவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா்.


மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் சாலையில் நடந்து சென்றவா்கள் மீது சரக்கு வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த இருவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா். விபத்து தொடா்பான விடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை ஜெய்ஹிந்த்புரம்-ஜீவா நகா் சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் சாலையில் நடந்து சென்றவா்கள் மீது மோதியது. இதில் ஜெய்ஹிந்த்புரம் தென்னகரம் பகுதியைச் சோ்ந்த சுப்புராம்(75), ஜெய்ஹிந்த்புரம் நேதாஜி தெருவைச் சோ்ந்த அசோகன்(50) ஆகிய இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அப்பகுதியினா் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அனுமதிக்கப்பட்ட இருவரும், சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா். இதுதொடா்பாக புகாரின்பேரில் மதுரை நகா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, சரக்கு வாகன ஓட்டுநா் மதுரை சோலையழகுபுரத்தைச் சோ்ந்த காா்த்திக்கை (19) கைது செய்தனா். சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் சரக்கு வாகனம் அதிக வேகத்தில் வந்து சாலையில் நடந்து செல்பவா்கள் மீது மோதும் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஜெய்ஹிந்துபுரம்-ஜீவாநகா் சந்திப்பில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால், அப்பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைத்து போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...