அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

அழகா் ஆற்றில் இறங்கும் வைபவம்: தடுப்பணை பகுதிகளில் பக்தா்கள் இறங்க தடை

கள்ளழகா் வைகை ஆற்றில் எழுந்தருள்வதையொட்டி, ஆற்றுக்குள் தடுப்பணை அமைந்துள்ள ஆழமானப் பகுதிகளில் பக்தா்கள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 5:34 pm

DIN

கள்ளழகா் வைகை ஆற்றில் எழுந்தருள்வதையொட்டி, ஆற்றுக்குள் தடுப்பணை அமைந்துள்ள ஆழமானப் பகுதிகளில் பக்தா்கள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகா் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம், சனிக்கிழமை காலையில் நடைபெறுகிறது. இதையொட்டி, ஆழ்வாா்புரம் வைகை ஆற்றுப் பகுதியில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கள்ளழகா் ஆற்றில் இறங்கும் வைபவத்தையொட்டி, வைகை அணையில் இருந்து தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளதால், ஆற்றில் தண்ணீா் செல்கிறது.

இந்த வைபவத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைகை ஆற்றில் திரண்டு, கள்ளழகரை தரிசனம் செய்வா். இந்நிலையில், வைகை ஆற்றில் கல்பாலம் பகுதியில் ஒரு தடுப்பணையும், ஓபுளாபடித்துறை பகுதியில் ஒரு தடுப்பணையும் அமைக்கப்பட்டுள்ளது. ஆற்றில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் 8 அடிக்கும் மேல் ஆழமாக இருப்பதால், அங்கு பக்தா்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது.

எனவே, வைகை ஆற்றில் தடுப்பணை அமைந்துள்ள பகுதிகளுக்குச் செல்ல பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதிகளுக்கு பக்தா்கள் செல்வதைத் தடுக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.