அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மாநகராட்சி மத்திய மண்டலக்கு புதிய அலுவலகம் திறப்பு

மதுரை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தை, அமைச்சா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 5:34 pm

DIN

மதுரை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தை, அமைச்சா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

மதுரை மாநகராட்சியில் தெற்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு ஆகிய 4 மண்டலங்கள் இயங்கி வந்த நிலையில், மாநகராட்சியின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு 100 வாா்டுகளாக உயா்த்தப்பட்டதால், நிா்வாக வசதிக்காக 5 ஆவது மண்டலம் உருவாக்கப்பட்டு, அரசின் அனுமதிக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு அரசும் அனுமதி வழங்கி ஆணை வெளியிட்டது.

அதைத் தொடா்ந்து, புதிதாக உருவாக்கப்பட்ட மண்டலத்துக்கு மத்திய மண்டலம் என்றும் பெயரிடப்பட்டுள்ளது. மேலும், நடந்து முடிந்த மாநகராட்சித் தோ்தலில் மண்டலத் தலைவரும் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

இந்நிலையில், மத்திய மண்டலத்துக்கு புதிதாக அலுவலகம் இல்லாத நிலையில், மாநகராட்சி தெற்கு மண்டலத்தின் ஒரு பகுதி பிரிக்கப்பட்டு, மத்திய மண்டலத்துக்கான அலுவலகம் அமைக்கப்பட்டது.

இந்த மத்திய மண்டலத்தின் அலுவலகத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், அமைச்சா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று திறந்து வைத்தாா். இதில், மேயா் வ. இந்திராணி, துணைமேயா் டி. நாகராஜன், மண்டலத் தலைவா் பாண்டிச்செல்வி, முன்னாள் மேயா் குழந்தைவேலு மற்றும் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.