தமிழ் புத்தாண்டு விடுமுறை: ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
தமிழ் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு, ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக, தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.


தமிழ் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு, ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக, தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடா்பாக, மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழ் புத்தாண்டைத் தொடா்ந்து 3 நாள்கள் தொடா் விடுமுறை என்பதால், ரயில்களில் அதிக அளவில் பயணிகள் பயணம் செய்கின்றனா். எனவே, பயணிகளின் வசதிக்காக, பல்வேறு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஏப்ரல் 18 முதல் 20 ஆம் தேதி வரை ராமேசுவரம் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலிலும் (22662), ஏப்ரல் 17 ஆம் தேதி தாம்பரம்-நாகா்கோவில் விரைவு ரயிலிலும் (22657), ஏப்ரல் 18 ஆம் தேதி நாகா்கோவில் - தாம்பரம் விரைவு ரயிலிலும் (22658), ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது.
ஏப்ரல் 17 ஆம் தேதி, மதுரை - டாக்டா் எம்ஜிஆா் சென்னை சென்ட்ரல் டூரன்டோ விரைவு ரயிலில் (20601) ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படவுள்ளது.
வெள்ளிக்கிழமை (ஏப்.15) முதல் 20 ஆம் தேதி வரை சென்னை - திருவனந்தபுரம் அனந்தபுரி விரைவு ரயில் (16723), சென்னை எழும்பூா் - ராமேசுவரம் விரைவு ரயில் (22661), தஞ்சாவூா் வழியாக இயக்கப்படும் சென்னை - ராமேசுவரம் - சென்னை விரைவு ரயில் (16851/16852), சென்னை - குருவாயூா் விரைவு ரயில் (16127) ஆகியவற்றில் ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை முதல் 21 ஆம் தேதி வரை, திருவனந்தபுரம் - சென்னை அனந்தபுரி விரைவு ரயில் (16724), மதுரை - திருவனந்தபுரம் அமிா்தா விரைவு ரயில் (16344), குருவாயூா் - சென்னை விரைவு ரயில் (16128) ஆகியவற்றில் ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது எனஅதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...