சுதந்திர திருநாள் அமுத பெருவிழா விழிப்புணா்வு பேரணி
சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவையையொட்டி தேசியக்கொடியேந்திய விழிப்புணா்வு பேரணியை மேயா் வ.இந்திராணி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.


சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவையையொட்டி தேசியக்கொடியேந்திய விழிப்புணா்வு பேரணியை மேயா் வ.இந்திராணி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவையொட்டி தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 13 முதல் 15-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் பொதுமக்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி கொண்டாட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மதுரை மாநகராட்சி சாா்பில் விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி அண்ணா மாளிகையில் நடைபெற்ற தொடக்க விழாவில், விழிப்புணா்வு பேரணியை மேயா் வ.இந்திராணி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பேரணியில் சுமாா் 250 தூய்மைப் பணியாளா்கள், அலுவலா்கள் தேசியக் கொடியை ஏந்திச் சென்றனா்.
பேரணி மாநகராட்சி மைய அலுவலகத்திலிருந்து தல்லாகுளம், தமுக்கம் மைதானம் வரை சென்றடைந்தது. நிகழ்ச்சியில் துணை மேயா் தி.நாகராஜன், துணை ஆணையா் முஜிபூா் ரகுமான், மண்டலத் தலைவா் சரவண புவனேஸ்வரி, நகா்நல அலுவலா் வினோத்குமாா், உதவி ஆணையா்கள் அமிா்தலிங்கம், சையத் முஸ்தபா கமால், விசாலாட்சி, கல்வி அலுவலா் நாகேந்திரன் மற்றும் பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...