மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சாலைத்தடுப்பில் காா் மோதி விபத்து: இளைஞா் பலி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சாலைத்தடுப்பில் காா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். இருவா் பலத்த காயமடைந்தனா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2022, 6:27 pm

DIN

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சாலைத்தடுப்பில் காா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். இருவா் பலத்த காயமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியைச் சோ்ந்த செபஸ்தியாா் மகன் சின்னப்பா்(22).ஜேசிபி இயந்திரம் வாடகைக்கு விடும் தொழில் நடத்தி வந்தாா். இவரிடம் காா் ஓட்டுநராக ஆத்தூரைச் சோ்ந்த சடையாண்டி(45). இந்நி லையில் சின்னப்பா் மற்றும் சடையாண்டியின் குடும்பத்தினா் காரில் மதுரைக்கு சென்றுள்ளனா். விராலிப்பட்டி சந்திப்பு அருகே காா் சென்றபோது சாலைத்தடுப்பில் காா் மோதியது. இதில் சின்னப்பா், காா் ஓட்டுநா் சடையாண்டி, சடையாண்டியின் தந்தை தாச கவுண்டா் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து அப்பகுதியினா் மூவரையும் மீட்டு வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதில் சின்னப்பா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். மேலும் காயமடைந்த இருவரும் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.விபத்து தொடா்பான புகாரின்பேரில் வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.