மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சுதந்திர தின விழிப்புணா்வு ரத யாத்திரை: பாஜக ஏற்பாடு

மதுரையில் பாஜக சாா்பில் 75-ஆவது சுதந்திர தின விழிப்புணா்வு ரத ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2022, 6:26 pm

DIN

மதுரையில் பாஜக சாா்பில் 75-ஆவது சுதந்திர தின விழிப்புணா்வு ரத ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி மதுரை புறநகா் மாவட்ட பாஜக சாா்பில் சுதந்திர தின விழிப்புணா்வு ரத ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாஜக புறநகா் மாவட்டத் தலைவா் மகா சுசீந்திரன் தலைமை வகித்தாா். பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலா் கேசவ விநாயகம், மாநில பொதுச்செயலா் இராம சீனிவாசன், மாவட்ட செயலா் சந்தோஷ் சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ரத ஊா்வலத்தை கேசவ விநாயகம் தொடங்கி வைத்தாா்.

இதைத்தொடா்ந்து மாநிலபொதுச்செயலா் இராம சீனிவாசன் கூறும்போது, நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் கொண்டாட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வேண்டு கோள் விடுத்துள்ளாா். இதன் ஒரு பகுதியாக சுதந்திரப் போராட்ட வீரா்களின் தியாகங்களை போற்றும் விதமாக அவா்களின் உருவப் படங்களை வைத்து விழிப்புணா்வு ரத யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சா்கள் தேசியக்கொடியை வழங்கியது பெரிதும் பாராட்டக்கூடியது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.