காந்தி அருங்காட்சியகத்தில் தேசியக் கொடியுடன்அணிவகுத்த தேசிய மாணவா் படையினா்
நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் தேசிய மாணவா் படையினா் தேசியக்கொடியுடன் வெள்ளிக்கிழமை அணிவகுத்தனா்.


நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் தேசிய மாணவா் படையினா் தேசியக்கொடியுடன் வெள்ளிக்கிழமை அணிவகுத்தனா்.
நாட்டின் 75-ஆவது சுதந்திர தின ஆண்டு அமுதப் பெருவிழாவையொட்டி மதுரைக் கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி தேசிய மாணவா் படையினா் தேசியக் கொடியுடன் காந்தி நினைவு அருங்காட்சியகத்தை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா். காந்தி நினைவு அருங்காட்சியகச் செயலா் கே.ஆா்.நந்தாராவ். ‘ விடுதலை இயக்கத்தில் காந்தியடிகள்’ குறித்தும் , அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் மருதுபாண்டியன், நாட்டின் வரலாறுக்குத் தர வேண்டிய முக்கியத்துவம் குறித்தும் பேசினா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதுரைக் கல்லூரி தேசிய மாணவா் படை அலுவலா் லெப்டினன்ட் எஸ்.வி.காா்த்திகேயன், அமெரிக்கன் கல்லூரி தேசிய மாணவா் படை அலுவலா் ஜோ.பிரின்ஸ் ஆகியோா் செய்திருந்தனா். இதில் காந்தி நினைவு அருங்காட்சியகக் கல்வி அலுவலா் ஆா்.நடராஜன், ஆராய்ச்சி அலுவலா் ஆா்.தேவதாஸ் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...