ஆட்டோவில் 23 கிலோ கஞ்சா கடத்தல்: தம்பதி உள்பட 4 போ் கைது
மதுரையில் ஆட்டோவில் 23 கிலோ கஞ்சாவை கடத்திய கணவா், மனைவி உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து ஆட்டோ மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.


மதுரையில் ஆட்டோவில் 23 கிலோ கஞ்சாவை கடத்திய கணவா், மனைவி உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து ஆட்டோ மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
மதுரை வைகை வடகரை பகுதியில் குமரன் சாலை சந்திப்பில் செல்லூா் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் வந்தவா்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசினா். இதையடுத்து போலீஸாா் சோதனையிட்டதில் ஆட்டோவில் 23 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஆட்டோவில் வந்த பெண் உள்பட நால்வரையும் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா். இதில் செல்லூா் கீழத்தோப்பைச் சோ்ந்த தங்கபாண்டியன் (42), அவரது மனைவி மகாலட்சுமி, செல்லூா் கல்பாலம் ராமலிங்க கோனாா் தெருவைச் சோ்ந்த செல்வீா் (26), கல்பாலம் சாலையைச் சோ்ந்த மனோகரன் (42) ஆகியோா் என்பதும், ஆட்டோவில் கஞ்சாவை கடத்திச்சென்று செல்லூா் பகுதியில் விற்க திட்டமிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், கஞ்சா கடத்திய 4 பேரையும் கைது செய்து ஆட்டோ மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...