டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மனைவி, பிள்ளைகளை கிணற்றில் தள்ளி கொன்று தற்கொலை முயற்சி: விவசாயி மீது கொலை வழக்குப் பதிவு

மதுரை அருகே மனைவி, இரு பிள்ளைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற விவசாயி மீது போலீஸாா் கொலை வழக்குப்பதிவுசெய்துள்ளனா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 6:40 pm

DIN

மதுரை அருகே மனைவி, இரு பிள்ளைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற விவசாயி மீது போலீஸாா் கொலை வழக்குப்பதிவுசெய்துள்ளனா்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அருகே உள்ள தவசிபுதூா் பகுதியில் கொய்யாதோப்பை குத்தகைக்கு எடுத்து நடத்துபவா் முருகன். விவசாயியான முருகன், தோப்பில் உள்ள கிணற்றில் தனது மனைவி சுரேகா(35), மகன் மோகனன்(11), மகள் யோகிதா(16) ஆகிய மூவரையும் கிணற்றில் தள்ளி கொலை செய்து விட்டு கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா். போலீஸாா் முருகனை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சோ்த்துள்ளனா். அங்கு முருகன் சிகிச்சைப்பெற்று வருகிறாா். இந்நிலையில் மனைவி, இரு பிள்ளைகளை கிணற்றில் தள்ளிக் கொலை செய்ததாக முருகன் மீது அலங்காநல்லூா் போலீஸாா் கொலை வழக்கு மற்றும் தற்கொலை முயற்சி ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.