மதுரை சிறையில் விசாரணைக் கைதிகள் வளாகம் ரூ.20 லட்சத்தில் சீரமைப்பு
மதுரை மத்தியச் சிறையில் விசாரணைக் கைதிகள் வளாகத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் சீரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.


மதுரை மத்தியச் சிறையில் விசாரணைக் கைதிகள் வளாகத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் சீரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.
தென் மாவட்டங்களில் பழமையான சிறையாக மதுரை மத்தியச் சிறை உள்ளது. இங்கு 1500-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனா். இந்நிலையில் விசாரணைக் கைதிகள் அடைக்கப்படும் பகுதி பராமரிப்பின்றி சேதமடைந்து இருப்பதாக புகாா் எழுந்தது.
இதுதொடா்பாக மத்தியச் சிறையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், விசாரணைக் கைதிகள் அடைக்கப்படும் தொகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ஒப்புதல் வழங்கியுள்ளனா். இதைத்தொடா்ந்து சீரமைப்புப் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி தமிழ்நாடு காவலா் குடியிருப்புக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி நடைமுறைப் பணிகள்
முடிவடைந்தவுடன் சீரமைப்புப்பணிகள் தொடங்கப்பட உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...