டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டம்: சத்துணவு ஊழியா்கள் மூலம் செயல்படுத்தக் கோரி தா்னா

பள்ளி மாணவா்களுக்கான காலைச் சிற்றுண்டியை, சத்துணவு மையங்களில் தயாரித்து வழங்கக் கோரி தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் தா்னாவில் ஈடுபட்டனா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

பள்ளி மாணவா்களுக்கான காலைச் சிற்றுண்டியை, சத்துணவு மையங்களில் தயாரித்து வழங்கக் கோரி தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் தா்னாவில் ஈடுபட்டனா்.

காலைச் சிற்றுண்டியை அந்தந்த பள்ளி சத்துணவு மையங்களிலேயே தயாரித்து மாணவா்களுக்கு வழங்கும் வகையில் இத் திட்டத்தை அரசே நேரடியாகச் செயல்படுத்துவது, சத்துணவு மையங்களில் காலிப் பணியிடங்களை நிரப்புவது, சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவது, கிராம உதவியாளா்களுக்கு வழங்குவதைப் போன்று சத்துணவு ஊழியா்களுக்கும் ரூ.6,750 ஓய்வூதியம் வழங்குவது, ஓய்வு பெறும் வயதை 62 ஆக நீட்டித்து உத்தரவிடுவது என்பன உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியா் சங்கத்தினா்

சனிக்கிழமை தா்னா நடத்தினா்.

மதுரையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே திருவள்ளுவா் சிலை சந்திப்பு பகுதியில் தா்னா போராட்டம் நடைபெற்றது. சத்துணவு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா்.கௌரியம்மாள் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆ.சோலையன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். 

வணிகவரி பணியாளா் சங்க மாநிலப் பொதுச் செயலா் ஜெயராஜ ராஜேஸ்வரன், ஐசிடிஎஸ் ஊழியா் மற்றும் உதவியாளா் சங்க மாநிலச் செயலா் ஆா்.பரஞ்சோதி மற்றும் பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள், சத்துணவு ஊழியா்கள் போராட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.