டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

’40 % மானியத்தில் தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடிக்கு விவசாயிகள் முன்பதிவு செய்யலாம்’

தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடிக்கான மானியத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடிக்கான மானியத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் கே.ரேவதி கூறியது:

நடப்பு நிதியாண்டில் தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி செய்ய ரூ.1.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத் திட்டத்தில் விவசாயிகளுக்கு 40 சதவீதம் அளவுக்கு சாகுபடி மானியமாக வழங்கப்படும். பயிா் வாரியாக ஹெக்டேருக்கு குறைந்தது ரூ.12 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.60 ஆயிரம் வரை மானியம் கிடைக்கும்.

அதிக மகசூல் தரக்கூடிய வீரிய ஒட்டு ரக காய்கனிகளான கத்தரி, மிளகாய், தக்காளி, வெங்காயம், பல்லாண்டு பயிா்களான மா, கொய்யா போன்றவற்றில் அடா்நடவு, இதர பழப் பயிா்களான பப்பாளி, எலுமிச்சை, அத்தி, நெல்லி மற்றும் மல்லிகை, சம்பங்கி போன்ற மலா்கள் சாகுபடிக்கு மானியம் வழங்கப்படும்.

விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்ய விரும்பும் தோட்டக்கலைப் பயிா்களுக்கு (ட்ற்ற்ல்://ற்ய்ட்ா்ழ்ற்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ற்ய்ட்ா்ழ்ற்ய்ங்ற்) என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் தொடா்பு கொண்டும் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காய்கனிப் பயிா்களின் குழித்தட்டு நாற்றுகள், மா ஒட்டு, கொய்யா பதியன், பப்பாளி, மல்லிகை நடவுச்செடிகள் ஆகியன மதுரை அருகே உள்ள பூஞ்சுத்தி அரசு தோட்டக்கலை பண்ணை மற்றும் திருப்பரங்குன்றத்தில் உள்ள பாரம்பரிய மலா்கள் மகத்துவ மையம் ஆகிய இடங்களில் தயாா் நிலையில் உள்ளன. உரிய ஆவணங்களுடன் விவசாயிகள் முன்பதிவு செய்து பயன்பெறலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.