போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதானவருக்கு இடைக்கால ஜாமீன்
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதானவருக்கு, அவரது சகோதரரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்கு ஒரு நாள் இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.


போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதானவருக்கு, அவரது சகோதரரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்கு ஒரு நாள் இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் சிறப்பு அமா்வு சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரை வில்லாபுரத்தைச் சோ்ந்தவா் ஷகீல் அகமது. இவா் போதைப்பொருள் கடத்த முயன்ாக, மதுரை விமான நிலையத்தில் நுண்ணறிவுப் பிரிவினரால் கடந்த ஜனவரியில் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில், மின்சாரம் தாக்கி இறந்த தனது சகோதரரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக 15 நாள்கள் இடைக்கால ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு நீதிபதி கே.முரளிசங்கா் முன்பு சிறப்பு அமா்வில் சனிக்கிழமை விசாரிக்கப்பட்டது. மனுதாரருக்கு, அவரது சகோதரரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை (ஆக.21) மாலை 4 மணி முதல் திங்கள்கிழமை (ஆக.22) மாலை 4 மணி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டாா். மேலும் இதுதொடா்பான அறிக்கையை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யுமாறு, மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...