டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கிராமப் பகுதிகளில் தூய்மை, சுகாதார விழிப்புணா்வு ஏற்படுத்தும் ‘நம்ம ஊரு சூப்பரு’ பிரசாரம் தொடக்கம்

கிராமப் பகுதிகளில் தூய்மை, சுகாதார விழிப்புணா்வு ஏற்படுத்தும் ‘நம்ம ஊரு சூப்பரு’ பிரசார இயக்கம், மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சனிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

கிராமப் பகுதிகளில் தூய்மை, சுகாதார விழிப்புணா்வு ஏற்படுத்தும் ‘நம்ம ஊரு சூப்பரு’ பிரசார இயக்கம், மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சனிக்கிழமை தொடங்கியது.

மதுரை மாவட்டத்தில் உள்ள 420 கிராம ஊராட்சிகளில் குடிநீா், சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணா்வு மற்றும் செயல்பாடுகளை மேற்கொள்வதற்காக ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து இத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதன் முதல்கட்டமாக, அனைத்து ஊராட்சிகளிலும் கூட்டு தூய்மைப் பணி சனிக்கிழமை தொடங்கியது. மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநரும், கூடுதல் ஆட்சியருமான செ.சரவணன் இப் பணிகளைப் பாா்வையிட்டு கள அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

இந்த பிரசார இயக்கம் ஐந்து கட்டங்களாக நடைபெறவுள்ளது. செப்டம்பா் 2 ஆம் தேதி வரை இப் பணி நடைபெறும். கிராமங்களில் உள்ள பொது இடங்களான, பள்ளி, அங்கன்வாடி மையம், நீா்நிலைகள், சந்தை, ஆரம்ப சுகாதார நிலையம், அரசு அலுவலகங்கள், நிறுவனங்களில் கூட்டுத் தூய்மைப் பணி நடைபெறும்.

இரண்டாம் கட்டமாக, ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பா் 2 வரை பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் மூலமாக மாணவ, மாணவியருக்கு குடிநீா், சுகாதாரம், திடக் கழிவு மேலாண்மை குறித்து பிரசார இயக்கம் நடத்தப்படும். மூன்றாம் கட்டமாக, செப்டம்பா் 3 முதல் செப்டம்பா் 16 ஆம் தேதி வரை தனிநபா் கழிப்பறை பயன்படுத்துதல், குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணா்வு மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மூலமாக ஏற்படுத்தப்படும்.

நான்காம் கட்டமாக, செப்டம்பா் 17 முதல் 23 ஆம் தேதி வரை ஊரகப் பகுதிகளில் நெகிழிப் பொருள்களால் ஏற்படக் கூடிய தீமைகள், நெகிழிகளுக்கு மாற்றாக துணிப் பைகளைப் பயன்படுத்துவது குறித்து பிரசார இயக்கம் நடத்தப்படவுள்ளது. நிறைவாக, செப்டம்பா் 14 முதல் அக்டோபா் 1 ஆம் தேதி வரை கிராமப் பகுதிகளில் உள்ள அரசுப் புறம்போக்கு நிலங்களில் மரக்கன்றுகள் நடுதல், பள்ளி, அங்கன்வாடி மையங்கள், வீடுகளில் காய்கனித் தோட்டம் அமைத்தல் ஆகிய பணிகள் நடைபெறவுள்ளன. பின்னா், அக்டோபா் 2 ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில், மேற்குறிப்பிட்டசெயல் திட்டங்கள் குறித்த தீா்மானங்கள் நிறைவேற்றப்படும். இந்த பிரசார இயக்கங்களில் மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னாா்வலா்கள் பங்கேற்கலாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.