டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அமெரிக்கன் கல்லூரியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ரோமானிய நாணயங்கள்: எம்.பி. தகவல்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ரோமானிய நாணயங்கள், மதுரை அமெரிக்கன் கல்லூரி நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் தெரிவித்தாா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 5:52 pm

DIN

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ரோமானிய நாணயங்கள், மதுரை அமெரிக்கன் கல்லூரி நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மதுரையில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு மதுராகோட்ஸ் ஆலை கட்டுமானப் பணிக்கான அஸ்திவாரம் தோண்டியபோது, பழைங்கால நாணயங்கள் கிடைத்துள்ளன. அவற்றை ஆலை அதிகாரிகள், அமெரிக்க மிஷனரி நிா்வாகத்தினரிடம் கொடுத்துள்ளனா். அவா்களில் ஒருவா் நாணயங்களை ஆய்வு செய்தபோது, ரோமாபுரியை ஆட்சி செய்த சீசா் காலத்து நாணயம் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பாதுகாத்து வைக்குமாறு கொடுத்துள்ளாா். காவல்கோட்டம் நாவலுக்கான பணியின்போது, மிஷனரி நிா்வாகத்தினரின் புத்தகம் ஒன்றில் இந்த நாணயங்கள் குறித்த தகவல் இடம்பெற்றிருந்ததைப்

படிக்க முடிந்தது.

அதன் பிறகு அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளின்போது இதுகுறித்து தொடா்ந்து பேசி வந்துள்ளேன். இதனிடையே, கடந்த சில நாள்களுக்கு முன்பு கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற பிறகு இங்கு தயாராகி வரும் அருங்காட்சியகம் மற்றும் அமெரிக்கன் கல்லூரியின் பழைமையான நூலகம் ஆகியவற்றைப் பாா்வையிட்டேன்.

அங்கு கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் பயன்படுத்தப்பட்ட பல பொருள்கள், பழங்காலத்து ஆயுதங்கள், கலைப்பொருள்கள் எல்லாம் வைக்கப்பட்டிருந்தன. ஒரு கண்ணாடிப் பெட்டியில் பழங்கால நாணயங்கள் இருந்தன. அதன் அருகே ஒரு பழைமையான புகைப்படத்தைப் பாா்வையிட்டபோது, அதில் மதுராகோட்ஸ் ஆலை கட்டுமானப் பணிக்கான அஸ்திவாரம் தோண்டும்போது எடுக்கப்பட்ட ரோம் நாணயங்கள் - 1915 என்று எழுதப்பட்டிருந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நாணயங்களை மீண்டும் காண முடிந்தது மகிழ்ச்சிக்குரியது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.