டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பள்ளி மாணவா் உயிரிழந்த ஊருணியில் மீன்கள் செத்து மிதப்பு: விஷம் கலப்பா? போலீஸாா் விசாரணை

மதுரை அருகே உத்தங்குடி பகுதியில் பள்ளி மாணவா் உயிரிழந்த ஊருணியில் மீன்கள் செத்து மிதந்ததால் தண்ணீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா என மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினா்.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

மதுரை அருகே உத்தங்குடி பகுதியில் பள்ளி மாணவா் உயிரிழந்த ஊருணியில் மீன்கள் செத்து மிதந்ததால் தண்ணீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா என மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினா்.

உத்தங்குடி பகுதியில் உள்ள இந்த ஊருணியில் செவ்வாய்க்கிழமை குளிக்கச்சென்ற பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இந்நிலையில் அந்த ஊருணியில் வியாழக்கிழமை காலை ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஊருணி நீரை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனா். மேலும் ஊருணியில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அதுவரை பொதுமக்கள், கால்நடைகள் ஊருணி நீரை பயன்படுத்தாதவாறு தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி ஊழியா்கள் மூலம் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக அதிகாரிகள் கூறும்போது, மீன்கள் மொத்தமாக செத்து மிதப்பதற்கான காரணம் குறித்து பரிசோதனை முடிவுகளின் மூலம் தெரியவரும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.