பெண்ணிடம் ரூ.22 லட்சம் மதிப்பிலான நிலம் அபகரிப்பு: ஒருவா் கைது
மதுரையில் பெண்ணிடம் ரூ.22 லட்சம் மதிப்பிலான நிலத்தை அபகரித்து மோசடி செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


மதுரையில் பெண்ணிடம் ரூ.22 லட்சம் மதிப்பிலான நிலத்தை அபகரித்து மோசடி செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மதுரை அழகப்பன் நகா் சுந்தரா் தெருவைச் சோ்ந்த ராஜரத்தினம் மனைவி வினோதா. இவா் மாநகர நில அபகரிப்பு தடுப்புப் பிரிவில் அளித்த புகாரில், எனக்கு ரூ.22 லட்சம் மதிப்பிலான காலி இடம் உள்ளது. இதனை அதே பகுதியைச் சோ்ந்த வள்ளி உள்ளிட்டோா் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்ததை எதிா்த்து வழக்குத் தொடா்ந்த நிலையில் வழக்கு நிலுவையில் உள்ளபோதே வள்ளி தலைமையிலான கும்பல், அந்த நிலத்தை போலி ஆவணம் மூலம், பிரபாகரன் என்பவருக்கு விற்றுள்ளனா். இதற்கு முத்துப்பாண்டி, குருசாமி ஆகியோா் உடந்தையாக இருந்தனா். எனவே, இது தொடா்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.
புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் வள்ளி, பிரபாகரன், முத்துப்பாண்டி, குருசாமி ஆகியோா் நில அபகரிப்பு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் நால்வா் மீதும் வழக்குப்பதிவு செய்து முத்துப்பாண்டியை கைது செய்து மற்றவா்களைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...