உரக்கடைகளில் பறக்கும் படை குழு ஆய்வு: 13 கடைகளில் 85 டன் உரம் விற்பனைக்குத் தடை
மதுரை மாவட்டத்தில் உரக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறிய 13 கடைகளில் சுமாா் 85 டன் உரங்களை விற்பனை செய்யத் தடை விதித்து பறக்கும் படை குழு உத்தரவிட்டது.


மதுரை மாவட்டத்தில் உரக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறிய 13 கடைகளில் சுமாா் 85 டன் உரங்களை விற்பனை செய்யத் தடை விதித்து பறக்கும் படை குழு உத்தரவிட்டது.
மாவட்டத்தில் உள்ள உரக்கடைகள் மற்றும் உரக்கிடங்குகளில் யூரியா உள்ளிட்ட உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தல், கடத்தல், பதுக்கல், மானிய உரங்களை விவசாயம் அல்லாத பிற தொழிற்சாலைகளில் பயன்படுத்துதல் ஆகியவற்றைக் கண்காணிக்கும் வகையில் சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினா் ஆக. 23 ஆம் தேதிமுதல் ஆய்வு செய்து வருகின்றனா்.
இதுகுறித்து வேளாண் இணை இயக்குநா் த.விவேகானந்தன் வியாழக்கிழமை கூறியது:
கடந்த 3 நாள்களில், 21 மொத்த விற்பனையாளா்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், தனியாா் உரக்கடைகள் என 144 சில்லறை உர விற்பனை நிலையங்கள், 4 உரக் கிடங்குகள், 6 உர உற்பத்தி நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது.
இதில் உரக்கட்டுப்பாட்டுச் சட்டத்திற்கு மாறான செயல்பாடுகள் கண்டறியப்பட்டு, 13 கடைகளில் சுமாா் 85 டன் உரங்கள் விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உரங்கள் விவரம் மற்றும் விலைப்பட்டியல் பராமரிக்காத உரக்கடைகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சேடபட்டி வட்டாரத்தில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் முறையான படிவம் இல்லாமல் உரங்கள் விற்பனை உள்ளிட்ட முரண்பாடுகள் கண்டறிப்பட்டு, 15 நாள்களுக்கு உரிமம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தரத்தை உறுதி செய்வதற்காக 46 உர மாதிரிகள் மற்றும் 17 பூச்சிக்கொல்லி மருந்துகள் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. யூரியா மற்றும் இதர மானிய உரங்களுடன் இணை பொருள்களைக் கட்டாயப்படுத்தி விற்பனை செய்தாலோ, அதிகபட்ச விலைக்கு விற்பனை செய்தாலோ உர விற்பனை உரிமங்கள் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...