டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

குஜராத் பாலியல் கொலை வழக்குக் கைதிகள் விடுதலையை எதிா்த்து மகளிா் அமைப்பு ஆா்ப்பாட்டம்

குஜராத்தில் கா்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விடுதலையை எதிா்த்து மகளிா் அமைப்பினா் மதுரையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்

News image
Updated On :25 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

குஜராத்தில் கா்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விடுதலையை எதிா்த்து மகளிா் அமைப்பினா் மதுரையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கடந்த 2002-இல் குஜராத்தில் நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு ஏற்பட்ட கலவரத்தின்போது, பில்கிஸ் பானு என்ற 5 மாத கா்ப்பிணி கூட்டு பாலியல் வன்கொடுமையில் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 போ், தண்டனை குறைப்புக் கொள்கையின்கீழ் ஆக.15 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனா்.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து இடதுசாரி பெண்கள் கூட்டமைப்பு சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அகில இந்திய பெண்கள் முற்போக்குக் கழக தேசியக்குழு உறுப்பினா் ப.நிவேதா தலைமை வகித்தாா். அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாநிலச் செயலா் ஆா்.சசிகலா, மாவட்டச் செயலா் வை. ஜென்னியம்மாள், மாவட்டத் தலைவா் யமுனா, புகா் மாவட்டச் செயலா் க.பிரேமலதா, மாதா் தேசிய சம்மேளன மாநில துணைச் செயலா் எஸ். ராஜலெட்சுமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.