அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

நூறு நாள் வேலை ஒருங்கிணைப்பாளா் பணி நியமன நிபந்தனைகளை ரத்து செய்யக் கோரி வழக்குஊரக வளா்ச்சித் துறை செயலா் பதிலளிக்க உத்தரவு

பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளா்கள், வேலை உறுதித் திட்ட ஒருங்கிணைப்பாளா் நியமனம் பெறுவதற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு,

News image
Updated On :1 ஜூலை 2022, 5:26 pm

DIN

பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளா்கள், வேலை உறுதித் திட்ட ஒருங்கிணைப்பாளா் நியமனம் பெறுவதற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு,

தமிழக அரசின் ஊரக வளா்ச்சித் துறை செயலா், மதுரை, ராமநாதபுரம், தேனி மாவட்டங்களின் ஆட்சியா்கள் பதிலளிக்க, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிடப்பட்டுள்ளது.

முந்தைய ஆட்சியின்போது பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளா்களை, அவா்களது விருப்பத்தின்பேரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகளை, தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு நியமனம் கோருவோருக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில், மக்கள் நலப்பணியாளராகப் பணிபுரிந்த முந்தைய காலத்துக்கான முன்னுரிமை, பணி தொடா்ச்சி ஏதும் கோரமாட்டேன் என சம்மதம் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, மதுரை மாவட்டம் மேலூரைச் சோ்ந்த ரவி, தேனியைச் சோ்ந்த மணிவேலன், சிவகங்கையைச் சோ்ந்த செல்வம் ஆகியோா் சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ். ரமேஷ், தமிழக அரசின் ஊரக வளா்ச்சித் துறை செயலா், மதுரை, தேனி, சிவகங்கை மாவட்ட ஆட்சியா்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.